பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாய்-குழந்தை திடீர் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல் உத்திரமேரூர் அடுத்த பெருநகர் பழைய காலனியை சேர்ந்தவர் ரகோத்தமன். விவசாயி. இவரது மனைவி சத்யா (வயது30). இவர் செய்யூர் சிப்காட்டில் உள்ள தனியார்நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சத்யா கர்ப்பம் அடைந்தார். நிறைமாதகர்ப்பிணியாக இருந்த சத்யாவுக்கு நேற்று மாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக மானாமதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு […]
Author: policeenews
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.75 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 8 பேர் கும்பல் கைது
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.75 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 8 பேர் கும்பல் கைது சென்னை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.75 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து அப்பிரிவு போலீஸார் கூறியதாவது: சென்னையிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருட்களை கும்பல் ஒன்று கடத்த திட்டமிட்டிருப்பதாக தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக அப்பிரிவு போலீஸார் அதிரடி […]
தனியார் நிறுவன ஊழியர் மீது மிளகாய்ப் பொடி தூவி 2 லட்சம் கொள்ளை; உடன் வந்த சக ஊழியரே உதவியது அம்பலம்!
தனியார் நிறுவன ஊழியர் மீது மிளகாய்ப் பொடி தூவி 2 லட்சம் கொள்ளை; உடன் வந்த சக ஊழியரே உதவியது அம்பலம்! தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் கரூரைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் தனியார் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நாள்தோறும் பணம் வசூல் செய்து வருவது வழக்கம். பரமசிவம் வசூல் செய்த 2 லட்சம் ரொக்க பணத்துடன், தன்னுடன் வேலை பார்க்கும் […]
அரசு பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பலி!
அரசு பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பலி! தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். தேனி மாவட்டம் கம்பம் கோம்பை சாலையில் வசிப்பவர் சேகர் மகன் கவிநாத் (35), இவருக்கு திருமணமாகி மனைவி இரண்டு மகன்கள் உள்ளனர். கவிநாத் உத்தமபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலைபார்த்து வந்தார். வேலை விஷயமாக உத்தமபாளையம் சென்றவர் செவ்வாய்க்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் கம்பம் நோக்கி வந்தார். […]
ஸ்ரீவில்லிபுத்தூரில் பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து!
ஸ்ரீவில்லிபுத்தூரில் பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து! விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம் ஆகின. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எம் கே எஸ் பெட்ரோல் பங்க் அருகில் முத்துராமலிங்க குமார் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம்போல் கடை திறப்பதற்காக உரிமையாளர் முத்துராமலிங்க குமார் என்பவர் […]
நாமக்கல்: சத்துணவு சமையல் பணியாளரை கொலை செய்தது ஏன்? – சக பெண் ஊழியர் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்
நாமக்கல்: சத்துணவு சமையல் பணியாளரை கொலை செய்தது ஏன்? – சக பெண் ஊழியர் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள புத்தர் தெரு பகுதியில் செயல்படும் நகராட்சி துவக்க பள்ளியில், தமிழக அரசின் புதிய திட்டமான காலை சிற்றுண்டி தயாரிக்கும் உணவகம் உள்ளது. இங்கு கௌரி காஞ்சனா என்ற பெண்மணியும், மாதேஸ்வரி என்ற பெண்ணும் சமையல்காரர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் கௌரி காஞ்சனா என்ற சமையலருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். […]
புதுமணப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை: காப்பாற்ற முயன்ற கணவனும் பலி – சேலத்தில் சோகம்
புதுமணப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை: காப்பாற்ற முயன்ற கணவனும் பலி – சேலத்தில் சோகம் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் ஊராட்சி, மாரியம்மன் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் அருள்முருகன்(27). கட்டிடத் தொழிலாளியான இவருக்கும், சந்தரபிள்ளைவலசு ஊராட்சி, பெரியார் சமத்துவபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்தோஷ் என்பவரின் மகள் அபிராமி (19) என்பவருக்கும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. மகிழ்ச்சியோடு வாழ்க்கையை ஆரம்பித்த இவர்களுக்குள், புத்தாண்டு தினமான நேற்றிரவு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த […]
செல் போன் கடையின் பூட்டை உடைத்து செல்போன் திருடியவர் கைது
செல் போன் கடையின் பூட்டை உடைத்து செல்போன் திருடியவர் கைது விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கடையின் பூட்டை உடைத்து செல்போன்களை திருடி சென்றவரை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியை சேர்ந்தவர் துவான் ஒலி பாதுஷா. இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 27ம் தேதி இரவு செல்போன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர், 15 செல்போன்களை திருடி சென்றார். இதுகுறித்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி […]
23 கொலைகள்; 271 பேர் விபத்தில் பலி; ரௌடிகள் லிஸ்ட்டில் 564 பேர்! – 2023 வேலூர் க்ரைம் ரிப்போர்ட்
23 கொலைகள்; 271 பேர் விபத்தில் பலி; ரௌடிகள் லிஸ்ட்டில் 564 பேர்! – 2023 வேலூர் க்ரைம் ரிப்போர்ட் 2023-ம் ஆண்டு, வேலூர் மாவட்டத்தில் மட்டும் 11,577 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ‘க்ரைம்’ ரிப்போர்ட்டை நீட்டுகிறது, அந்த மாவட்டக் காவல்துறை. ஆண்டு தொடக்கத்திலிருந்து இறுதி வரை 23 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பதிவான 23 கொலை வழக்குகளிலும் தொடர்புடைய 41 எதிரிகளும் கைது செய்யப்பட்டனர். இரண்டு கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் ஆயுள் […]
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி உட்கோட்டம் நரிக்குடி காவல் நிலையத்தின்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி உட்கோட்டம் நரிக்குடி காவல் நிலையத்தின் புதிய சட்டம் ஒழுங்கு சார்பு ஆய்வாளராக திரு. முத்துக்குமார் அவர்கள் இன்று பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து நரிக்குடி காவல் நிலைய சரக இன்ஸ்பெக்டர், சக காவலர்கள், தனிப்பிரிவு காவலர்கள், என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.










