வாகன விபத்து பைகில் சென்றவர் பலி, கேரளா வாலிபர் கைது
தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் புளியை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை வழியாக கேரளா மாநிலத்திற்கு கனரக வாகனங்களில் கனிம வளம் மற்றும் சிமெண்டுகள் ஏற்றி செல்வதால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகிறது
மேற்படி வாகன விபத்துகளை கட்டுப்படுத்த மாவட்ட. காவல் கண்காணிப்பாளர் திரு எஸ் அரவிந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி தென்காசி துணை கண்காணிப்பாளர் திரு தமிழ் இனியன் அவர்களின் மேற்பார்வையில் கடந்த 18 01 2025 அன்று கேரளா மாநிலத்திலிருந்து KL 81 B0492 என்ற பதிவு எண் கொண்ட லாரி திருமங்கலம் To கொல்லம் ரோட்டில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி சிற்ப கலைக்கூடம் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த ராமர் என்பவர் மீது மோதி ராமர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இந்த சம்பவம் தொடர்பாக செங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் ஆய்வாளர் திரு பாலமுருகன் அவர்கள் வழக்கின் எதிரியான கேரளா மாநிலம் ஆரியங்காவை சேர்ந்த ரவி மகன் பிஜீ என்பவரை கைது செய்து செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.