
ரூ. 5 லட்சம் மோசடி செய்தவர் கைது
மதுரை கரும்பாலையைச் சேர்ந்த முரளி என்பவரது மனைவி புவனேஸ்வரி வயது 26 இவர் சொந்த வீடு கட்டுவதற்கான மனையிடம் தேடிக் கொண்டிருந்தார். இவருக்கு ரெஜினா என்பவர் மூலம் சக்கிமங்கலத்தைச் சேர்ந்த கதிரேசன் வயது 59 அறிமுகமானார். அவர் ஆண்டார் கொட்டாரத்தில் தனக்கு சொந்தமான 3 சென்ட் நிலம் இருப்பதாக புவனேஸ்வரிடம் கூறினார். அதற்கு ரூ. 6 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அந்த தொகையை கடந்த 5.12.2023 ல் கதிரேசனிடம் அவர் கொடுத்துள்ளார். ஆனால் அந்த இடத்தை அவர் பத்திரப்பதிவு செய்து தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.இது குறித்து புவனேஸ்வரி கேட்டதால் ரூ.1 லட்சத்தை கொடுத்த அவர் ரூ. 5 லட்சத்தை திரும்ப தராமல் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கதிரேசனை கைது செய்தனர்.
