
மதுரை பாஸ்போர்ட் ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நெல்லையைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். மதுரை தல்லாகுளத்தில் உள்ள நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் எஸ்ஐ சாந்தா நேற்று முன்தினம் பணியில் இருந்தார் அப்போது ரேஸ்கோர்ஸ் பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும் அது வெடிக்கப் போவதாகவும் ஆன்லைன் செயலி மூலம் மெயிலில் மிரட்டல் விடுக்க ப்பட்டிருந்தது உடனே இது குறித்து ஹைவே பட்ரோல் போலீஸ் எஸ் எஸ் ஐ சீனிவாசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ரேஸ்கோர்ஸ் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு மோப்பநாய் உடன் சென்று சோதனையிட்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து செயலியில் பதிவான செல்போன் எண் மூலம் மிரட்டல் விடுத்த வரை போலீசார் கண்டுபிடித்தனர் இதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் நெல்லை மாவட்டம் நடு குறிச்சியைச் சேர்ந்த அருண் ஆறுமுகம் வயது 57 என்பதும் இவர் ஏற்கனவே கடந்த 02.07.2025 ல் ரேஸ் கோர்ஸ் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது இதையடுத்து பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அருண் ஆறுமுகத்தை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.
