
கஞ்சா பறிமுதல் வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை
மதுரை தேனி மாவட்டம் கம்பம் வடக்கு போலீசார் கடந்த 20.08.2016ல் நாக கன்னியம்மன் கோயில் தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்ற கம்பத்தை சேர்ந்த முருகன் வயது 51 என்பவரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவர் கையில் இருந்த ஒரு பையை கீழே போட்டுவிட்டு போலீசாரை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடினார். பையில் இரண்டு கிலோ கஞ்சா இருந்தது. பின்னர் தலை மறைவாக இருந்த இவரை கைது செய்தனர் இந்த வழக்கின் விசாரணை மதுரை இனக் கலவர தடுப்பு நீதிமன்றத்தில் நடந்தது அரசு தரப்பில் வக்கீல் ராமசுப்பிரமணியன் ஆஜரானார் இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி ஜெயக்குமாரி ஜெமிரத்னா தீர்ப்பளித்தார். அதில் முருகன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு பத்தாண்டு சிறை தண்டனை ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
