
கடையில் ரூ,2. 95 லட்சம் திருட்டு
மதுரை கென்னட் நகரை சேர்ந்தவர் ராஜா (49 ) இவர் ஒர்க் ஷாப் ரோடு ஆட்டு மந்தை பொட்டல் பகுதியில் ஆட்டோமொபைல் ஏஜென்சி நடத்தி வருகிறார் கடந்த ஜூலை 12ஆம் தேதி இரவு இவர் தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். மீண்டும் ஜூலை 14ஆம் தேதி காலை வந்து கடையை திறந்தார் அப்போது கடையின் பக்கவாட்டில் நிரந்தரமாக மூடப்பட்டு இருந்த கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் கடையில் அவர் பணம் வைத்திருந்த இடத்தை பார்த்தபோது ரூ.2.95 லட்சம் திருடு போனது தெரிய வந்தது இது குறித்து ராஜா திலகர் திடல் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.
