Police Department News

சென்னை பெருநகர காவல் நிறைவாழ்வுப் பயிற்சி பயிற்றுனர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழாவினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் தொடக்கி வைத்து சான்றிதழ்கள் வழங்கினார்.

கடந்த வருடம் 16.11.2018 அன்று முதல் பெங்களூரில் நடைபெற்ற NIMHANS சென்னை பெருநகர காவல் நிறைவாழ்வுப் பயிற்சியை ஓராண்டுகால முடித்தவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழா சென்னை பெருநகர ஆணையரகத்தில் 25.11.2019 துவங்கி 26.11.2019 வரை 2 நாட்கள் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு பயிற்சியளராக காவல் ஆய்வாளர்கள் K.A பார்வதி, CCB, G.G.பிரசித் தீபா,D6 அண்ணா சதுக்கம் PS, P. சாந்தி தேவி,V-1 வில்லிவாக்கம் PS(crime), G.கீதா,CCB, K. ஷோபா ராணி,W-29 ஆவடி AWPS, R. நவரத்தினம் IUCAW மற்றும் உதவி ஆய்வாளர்கள் A. வடிவேலன் M-5 எண்ணூர் PS ,S. ரஜினிஷ்,K-6 சத்திரம் PS, R. ராஜீவ் ,C-5 கொத்தவால்சாவடி PS, V.J , பிரேமா ,N-3 முத்தியால் பேட்டை (crime), G. சாய் கணேஷ் IS ஆகியோர்களால் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இவ்விழாவில் இதுவரை 7424 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர். சென்னை பெருநகர காவல் நிறைவாழ்வுப் பயிற்சி பயிற்றுனர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி 2 நாட்கள் முடித்தமைக்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 26.11.2019 அன்று நேரில் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்

Leave a Reply

Your email address will not be published.