Police Recruitment

சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு POCSO சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு POCSO சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

2023 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று, செம்மஞ்சேரி, அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மின்தூக்கியை இயக்கிவந்த எதிரி வேலாயுதம், பாதிக்கப்பட்ட 2 சிறுமிகள், விளையாடி முடித்துவிட்டு வீட்டிற்கு மின்தூக்கியில் (LIFT) சென்றபோது, எதிரி வேலாயுதம், பாலியல் நோக்கத்துடன் சிறுமிகளிடம் அத்துமீறி பாலியல் தாக்குதலில் (Aggravated Sexual Assault) ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து மேற்படி, பாதிக்க்பபட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில், செம்மஞ்சேரி, அனைத்து மகளிர் காவல் : 304/2023 & 305/2023 4/1 9 (m), 10 of the POCSO Act-ன்படி, வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை செய்யப்பட்டது.

புலன் விசாரணையின்போது, எதிரி வேலாயுதம், வ/56/2023, த/பெ ரத்தினசபாபதி, என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். புலன்விசாரணை துரிதமாக முடிக்கப்பட்டு மேற்படி எதிரி வேலாயுதம், மீது செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் 09.10.2024 அன்று, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கானது 14.10.2024 அன்று, செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் POCSO சட்டத்தின்படி, குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு Spl. SC. Nos. 154/2023 & 155/2023, நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிமன்ற விசாரணையின் போது 10 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு, 13 சான்று ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, உரிய சட்டப்படி நடைமுறைகள் அனைத்தையும் பின்பற்றி, நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரை, குற்றவாளி என தீர்மானித்து கீழ்கண்ட தண்டனையை வழங்கியுள்ளது.

1) POCSO சட்டம் 2012- பிரிவு 10-ன் கீழ்:

முதல் வழக்கில் 7 வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1000/- அபராதம் விதிக்கப்ட்டுள்ளது. அபராதம் செலுத்த தவறினால் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

இரண்டாவது வழக்கில் 7 வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1000/- அபராதம் விதிக்கப்ட்டுள்ளது. அபராதம் செலுத்த தவறினால் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

2) பாதிக்கப்பட்ட 2 நபர்களுக்கும் இழப்பீடு நிதியாக ரூ.2,00,000/-வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.