
சிவகங்கை மாவட்டம் கீழடியை மையமாக கொண்டு புதிய காவல் நிலையம் திறப்பு !
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 2025-2026-ம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி சுற்று வட்டார பகுதிகளை ஒருங்கிணைத்து கீழடியை மையமாகக் கொண்டு புதிய காவல் நிலையம் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
மேற்கண்ட அறிவிப்பின்படி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று 22.12.2025 தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக மானாமதுரை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கீழடி காவல் நிலையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சிவ பிரசாத்., இ. கா. ப., அவர்கள், மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.




