குடிப்பதற்கு பணம் தர மறுத்த தாயை போட்டு தள்ளுவேன் என மிரட்டிய மகன், தெப்பகுளம் போலீசார் விசாரணை
மதுரை, தெப்பகுளம் B3, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான சிமெண்ட்டு ரோடு, வீரத்தமிழன் தெரு, கம்பர் வீதி வாத்தியார் காம்பவுண்டில் தன்னுடை மூத்த மகள் மாரிமுத்து என்பவரின் வீட்டில் வசித்து வருபவர் மலைராஜன் மனைவி திருமதி சாந்தா வயது 67/21, இவருடைய கணவர் மலைராஜன் 14 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 3 பெண் பிள்ளைகள், மற்றும் ஒரு ஆண் ஆக 4 பிள்ளைகள். அனைவரும் திருமணம் முடித்து அவரவர் குடும்பத்துடன் தனித்தனியே வசித்து வருகின்றனர். மூத்த மகள் மாரிமுத்துவும், இளைய மகள் மாரீஸ்வரியும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசிக்கின்றனர். தனது மகன் செந்தில்குமார் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்சமயம் மூத்த மகள் மாரிமுத்து விட்டில் தங்கியிரீந்தார், இவர் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார், மது போதைக்கு அடிமையான இவர் தான் வேலை பார்த்து வரும் வருமானத்தை முழுவதையும் குடித்து வந்தார் இந்த நிலையில் கடந்த 7 ம் தேதி இரவு சுமார் 7 மணியளவில் இவர் தன் மூத்த மகளுடன் பேசிக் கொண்டிருந்த சமயம் அங்கு வந்த மகன் செந்தில்குமார் குடிப்பதற்கு பணம் கேட்கவே பணம் தரவில்லை இதனால் கோபமடைந்த மகன் செந்தில்குமார் தன்னுடைய தாய்,மற்றும் சகோதரிகளை அசிங்கமாக திட்டி கண்ணத்தில்அடித்துள்ளார் அதன்பிறகு திரும்ப வந்து பணம் கேட்பேன் தராவிட்டால் உங்களை போட்டுத் தள்ளிவிட்டு போய்கிட்டே இருப்பேன் என மிரட்டியுள்ளார், இதனை தொடர்ந்து B3, தெப்பகுளம் காவல்நிலையத்தில் வந்து தன் மகன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆய்வாளர் திரு. தமிழ்செல்வன் அவர்களிடம் புகார் அளித்தார், புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.