
மதுரை, மீனாட்சியம்மன் கோவில் தரிசனத்திற்கு வந்தவர்கள் தவறவிட்ட நகைகளை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க உதவிய பெண் சிறப்பு சார்பு ஆவாளர்களை பாராட்டிய காவல் ஆணையர்.
05.02.2026 அன்று சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவரது மனைவி ரேவதி, வயது 39/2026 என்பவர் தனது குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்த போது சுமார் 1. 1/2 பவுன் மதிப்புள்ள இரண்டு ஜோடி தங்கதோடுகள் மற்றும் மூன்று தங்க காயின்கள் அடங்கிய மணி பர்சை கீழே தவறவிட்டதாக மீனாட்சி அம்மன் கோவில் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததின் பேரில் அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த மீனாட்சி அம்மன் கோவில் காவல் துறையினர் புகார்தாரர் தவறவிட்ட மணிபர்சை கோவிலுக்கு சுற்றுலா பயணியாக தரிசனம் செய்ய வந்த உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 60/2026 வயது மதிக்கத்தக்க நபர் எடுப்பது தெரிய வரவே அவரிடமிருந்து நகை பர்சை பெற்று மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் முன்னிலையில் இன்று புகார்தாரரிடம் ஒப்படைத்தனர்.
துரிதமாக செயல்பட்டு நகையை மீட்க உதவிய பெண் சிறப்பு சார்பு ஆய்வாளர்களை காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.




