Police Recruitment

தூத்துக்குடி வீட்டில் திருப்பூர் இளம்பெண் உடல் கருகி சாவு ;கள்ளக்காதலன் கைது

தூத்துக்குடி,2019 நவம்பர் 11 ; தூத்துக்குடி வீட்டில் திருப்பூர் இளம்பெண் உடல் கருகி பிணமாக கிடந்தார். அவரை  மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தது தெரியவந்தது.


தூத்துக்குடி விவேகானந்தா நகர் ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் ஒரு தம்பதி வாடகைக்கு குடியேறினர். ஆனால் நேற்று மதியம் வரை அந்த வீடு திறக்கப்படவில்லை.  வீட்டின் உள்ளே இருந்து உடல் எரிந்த துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் தாளமுத்துநகர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் தங்ககிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உள்பக்கமாக பூட்டிக்கிடந்த அந்த வீட்டை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு ஒரு இளம்பெண் உடல் தீயில் கருகிய நிலையில் கிடந்தது. இதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண் நேற்று முன்தினம் இரவே இறந்து இருந்ததாலும், உடல் தீயில் கருகி இருந்ததாலும் துர்நாற்றம் வீசி உள்ளது. உடனே  போலீசார், அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த பெண் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த கவிதா (வயது 30) என்பது தெரியவந்தது.

 இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட தகராறில் கணவரையும் இரண்டு குழந்தைகளின் தவிக்க விட்டுவிட்டு திருப்பூரில் இருந்து தூத்துக்குடி எட்வினுடன் கவிதா கடந்த 3 ஆண்டுகளாக தூத்துக்குடி மாதாநகர் அருகே குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் ஜோதிபாசு நகரை சேர்ந்த கருப்பசாமி (32) என்பவருடன் கவிதாவுக்கு அடுத்த கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.  அங்கிருந்து நேற்று முன்தினம் கவிதா, புதிய வீட்டுக்கு வந்து உள்ளார். அந்த வீட்டின் கதவு எளிதில் கழற்றி மாட்டும் வகையில் இருந்தது.இதையறிந்த கவிதாவுக்கு தெரிந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது கவிதாவுக்கு தொடர்ந்து செல்போன் அழைப்பு வந்து உள்ளது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த  கருப்பசாமி கவிதாவை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர்.  எனினும் பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவு வந்த பின்னர் தான் கவிதாவின் சாவுக்கான முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். 

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு முத்துக்குமார் தூத்துக்குடி மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.