தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சியில் பணியமர்த்தல் ஆணை
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட 2019 ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெற்ற திருச்சி மாநகரை சேர்ந்த 11 நபர்களுக்கு பணியமர்த்தல் ஆணை நேற்று திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்க்பட்டது
சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் தேர்வு செய்யப்பட்ட நல்லைய்யா, கிருஷ்ணவேணி, சத்தியா, கோபிநாத், ஜானகிராமன், ஜீவிதா, கவிதா, பிரசாத், நவீன்ராஜ், ஆதித்தியா, மற்றும் பூவிழிப்பிரபா, ஆகியோர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு. அருண் நேரில் அழைத்து அவர்களுக்கு வாழத்துக்கள் கூறி பொருப்புள்ள அதிகாரியாக நடந்து கொள்ள வேண்டும் எந்த வித சிபாரிசும் இன்றி வருபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும், நேர்மையுடனும் சேவை மனப்பான்மையுடன் பணிபுரிய வேண்டும் என அறிவுரை கூறி பணியமர்தல் ஆணையை அவர்களுக்கு வழங்கினார்