Police Department News

தூத்துக்குடி மாவட்டம் தருவை மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்ற தூத்துக்குடியை சேர்ந்த மாணவர் சந்தோஷ் குருநாதனை பாராட்டும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் தருவை மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்ற தூத்துக்குடியை சேர்ந்த மாணவர் சந்தோஷ் குருநாதனை பாராட்டும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி தருவை மைதானத்தில் 14/08/21 அன்று நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் 5 வயதுக்குட்பட்ட பிரிவில் மாநிலம் முழுவதும் இருந்து மொத்தம் 22 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர், இதில் தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த குருராஜா என்பவரின் மகன் சந்தோஷ் குருநாதன் என்ற 5 வயது மாணவன் சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவரை பாராட்டும் நிகழ்ச்சி நேற்று 22 ம் தேதி தூத்துக்குடி சிவன் கோவில் அருகே உள்ள கவிதா மகாலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் தங்கப்பதக்கம் வென்ற சந்தோஷ்குருநாதன் மற்ற மணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார். இவர் வருங்காலத்தில் மிக சிறந்த சாதனையாளராக விளங்குவார். இந்த சிறு வயதிலேயே பெற்றோருக்கு பெருமை தேடி தந்துள்ளார். 5 வயதிலேயே நமது பாரம்பரிய கலையான சிலம்பத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு மிக சிறந்த பயிற்சி பெற்று போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெறுமை தேடி தந்துள்ளார். மேலும் இவர் சிலம்பத்தில் இன்னும் நிறைய கற்று கொண்டு எதிர்காலத்தில் இது போன்று பல போட்டிகளில் கலந்து கொண்டு மென்மேலும் பல வெற்றிகள் பெற வேண்டும் என்று வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் சந்தோஷ்குருநாதனின் தந்தை திரு.குருராஜா, தாயார் திருமதி.யுவராணி, திரு.கீதாசெல்வமாரியப்பன், துத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும்பெருமாள், மத்திய பாகம் காவல்நிலைய ஆய்வாளர் திரு.ஜெயபிரகாஷ் அவர்கள், உதவி ஆய்வாளர் திரு.முருகப்பெருமாள், மற்றும் சிறுவனின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

No comments to show.

Leave a Reply

Your email address will not be published.