Police Department News

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 11 சிசிடிவி கேமராக்கள் திறப்பு விழா மற்றும் கிராம மக்கள் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 11 சிசிடிவி கேமராக்கள் திறப்பு விழா மற்றும் கிராம மக்கள் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்டம் தருவைகுளம் காவல் நிலையம எல்லைக்குட்பட்ட வேப்பலோடை, சமத்துவபுரம், மற்றும் ஏ.குமாரபுரம், ஆகிய பகுதிகளில் முக்கிய இடங்களில் ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் 11 சிசிடிவி கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது, மேற்படி புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை வேப்பலோடை மெயின்ரோடு பகுதியில் 24 ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து வேப்பலோடை சமுதாய நல கூடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் குற்றங்களை குறைப்பதற்கு சிசிடிவி கேமரா என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இந்த கேமரா பொருத்துவதன் மூலம் இரண்டு”நன்மைகள், ஒன்று குற்றங்கள் நடக்காமல் தடுப்பது, மற்றொன்று நடந்த குற்றத்தை கண்டுபிடிப்பது. மேலும் கிழக்கு கடற்கரை சாலைரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் வாகனங்களின் எண்களை வைத்து எளிதாக கண்டறியவும் சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுகின்றனர். மேலும் இந்த கிராம விழிப்புணர்வு கூட்டம் கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் இறைஞர்களிடையே ஒரு விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தி வருகிறோம் உங்கள் ஊரில் சிறு சிறு பிரச்ஞனைகள் வந்தால் அதை உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தால் அதை உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் உங்கள் பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் கல்லூரி படிப்பு வரை படித்து கல்வி அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் குறிப்பாக பெண்களும் பட்டப்படிப்பு வரை படிக்க வேண்டும் கல்வி ஒன்றுதான் வருங்காலங்களில் உங்கள் குழந்தைகளை சாதனையாளர்களாக மாற்றும். மேலும் கொரோனா பெருந்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூக்கை நன்றாக மூடி முககவசம் அணிய வேண்டும். அதிலும் 2 முககவசம் அணிவது மிகவும் நல்லது அடிகககடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசனி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். என்றும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வின் போது விளாத்திகுளம், காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ், விளாத்திகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. ராபி சுஜின் ஜோஸ் , உதவி ஆய்வாளர் திரு சரவணன் வேப்பலோடை பஞ்சாயத்து தலைவர் திருமதி. கனி, வேப்பலோடை விவசாயிகள் சங்கத்தலைவர் திரு. ரூஸ்வெல்ட், துணைத்தலைவர் திரு. சிவசாமி, வியாபாரிகள் சங்க தலைவர் திரு. பாண்டி, செயலாளர் திரு. வேத ரத்தினம் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.