இந்து அற நிலைய துறை கட்டுபாட்டில் உள்ள
ஐந்து கிராம பாரம்பரிய கோவில்களை விடுவிக்க கோரி ஆறு கிராம பொது மக்கள் ஆரப்பாட்டம்
மதுரை மாவட்டம் செக்கானூரணியில் நூற்றாண்டு பழையான ஐந்து பாரம்பரிய கிராம கோவில்களை இந்து சமய அறநிலைய துறை சார்ந்த தாக்கார் நிர்வாகத்திலிருந்து விடுவிக்ககோரி மதுரை தேனி சாலையில் பெண்கள் உள்ளிட்ட 500 க்கும் மேறபட்ட கிராம பொதுமக்கள் திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலூகாவிற்குட்பட்ட
ஆ. கொக்குளம், தேன்கல்பட்டி, பாறைப்பட்டி, ஒத்தப்பட்டி அய்யம்பட்டி, சிக்கம்பட்டி ஆகிய ஆறு கிராமத்தினருக்கு பாத்தியப்பட்டு பல நூறு ஆண்டுகளாக பல ஆயிரம் மக்கள் பாரம்பரியமாக வழிபாடுகள் செய்து வந்த பேக்காமன் கருப்பணசாமி கோயில், பாம்பூர் அய்யனார் கோயில், காணியாளன் முத்தையா சாமிகோயில், மந்தையம்மன், வடக்கு வாச்செல்லி கோயில்.மந்தை விநாயகர் கோயில் உள்ளிட்ட 5 கோயில்களை சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தமிழக அரசின் இந்து சமய அறநிலைய துறையின் தக்கார் நிர்வாகத்தின் கீழ் வெளிப்படையான அறிவிப்பு பலகையின்றி இருந்து வந்து உள்ளது .இந்நிலையில் இந்த ஐந்து கிராம பாரம்பரிய கோவில்களை இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து பாரம்பரிய கிராம வழக்கப்படி வழிபாடு நடக்க ஆறு கிராம மக்களிடம் ஐந்து கோவில்களை ஒப்படைக்க கோரியும் மேலும் கோவில்களுக்கு பட்டா வழங்க வேண்டியும் செக்கானூரணி பேருந்து நிலையம் முன்பு மதுரை. தேனி .தேசிய நெடுஞ்சாலையில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் பொது மக்கள் ஈடுபட்டனர். பின்னர் பேரணியாக வந்து அங்குள்ள தேவர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்து பின்னர் .தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அடுத்தகட்ட போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டர்கள் தெரிவித்தனர். இதில் பெண்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏ.டி.எஸ்.பி., ரமேஷ்பாபு .தலைமையில் டி.எஸ்.பி.க்கள் நல்லு, இளவரசன், மற்றும் இன்ஸ்பெக்டர் சிவசக்தி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.