5 வயது பெண் குழந்தையிடம் தவராக நடந்த மதுரை, இஸ்மாயில்புரத்தை சேர்ந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
மதுரை இஸ்மாயில்புரம் 12 வது தெருவில் வசித்து வருபவர் சேக் அப்துல்ரஹ்மான் அவர்களின் மனைவி பரகத்நிஷா வயது 23/21, இவரது கணவர் சேக்அப்துல்ரஹ்மான் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வருகிறார், இவர்களுக்கு 7 வயதில் ஜாஸ்மின்பானு என்ற பெண் குழந்தையும் 5 வயதில் அப்ரின்பானு என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இந்த இரு குழந்தைகளும் விருதுநகர் மேல் நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 8 ம் தேதி மாலை வாதியின் கணவர் ராமேஸ்வரம் சவாரி சென்றிருந்தார். வாதியின் மாமியார், நாத்தனார், மற்றும் மூத்த மகள் ஆகியோர் கமுதிக்கு சென்று விட்ட நிலையில் வாதியின் இரண்டாவது மகள் அப்ரின்பானு மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அன்றிரவு சுமார் 7 மணியளவில் குழந்தையினிடம் அயர்ன்காரர் வந்தால் துணியை வாங்கி வைக்க சொல்லி விட்டு பாத் ரூம் போய் விட்டு வந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை உடனை குழந்தையை கூப்பிட, மாடியில் குடியிருக்கும் சம்ஸ்நிஷா குழந்தை மொட்டை மாடியிலிருந்து வருவதாக கூறவே குழந்தையை அழைத்து வீட்டில் வைத்து விசாரித்த போது மாடி வீட்டில் குடியிருக்கும் பழனிச்சாமி மகன் பாலகிருஷ்ணன் வயது 25/21, குழந்தையை கையைப் பிடித்து மாடிக்கு அழைத்துச் சென்று குழந்தையின் அடி வயிற்றை பிடித்து இழுத்தும் தொடக்கூடாத பகுதியை தொடச்சொல்லியும் உள்ளார், குழந்தையின் அப்பா வெளியூரிலிருந்து வந்ததும் மறுநாள் 9 ம் தேதி மதுரை டவுன் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் நேரில் சென்று புகார் அளித்தனர், புகாரை பெற்றுக்கொண்டதும் ஆய்வாளர் திருமதி. கீதாலெட்சுமி அவர்கள் எதிரியை அழைத்து விசாரணை செய்து அவர் மீது போக்சோ சட்டம் 7& 8 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தினர்.