Police Department News

11 ஆண்டுகளாக தொடரும் பழிக்குபழி கொலை சம்பவம் – திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் 5 பேர் சரண்

11 ஆண்டுகளாக தொடரும் பழிக்குபழி கொலை சம்பவம் – திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் 5 பேர் சரண்

11 ஆண்டுகளாக தொடரும் பழிக்குபழி கொலை சம்பவம் – திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் 5 பேர் சரண்

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவராக இருந்த திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டி சேர்ந்த பசுபதி பாண்டியன்,கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி, வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளி வந்து இருந்த விருதுநகர் மாவட்டம் முகவூரை சேர்ந்த மாடசாமி (38), 2013ல் கொலை செய்யப்பட்டார்.

கடந்த 2014ல், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முத்துப்பாண்டி கொல்லப்பட்டார். கடந்த 2016ல், தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த ஆறுமுகசாமி என்பவரும், 2019ல், ராஜபாளையத்தை அடுத்த சொக்கநாதபுரத்தை சேர்ந்த பாட்ஷா என்கிற மாடசாமி, 29, என்பவரும் படுகொலை செய்யப்பட்டனர்.

அந்த வரிசையில், பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நந்தவணப்பட்டியில் வீடு பிடித்து கொடுத்ததாக, வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இ.பி.காலனி டாஸ்மாக் அருகே நிர்மலாதேவி (22.09.2021) அன்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 4 ல் நீதிபதி குமார் முன் சரணடைந்துள்ளனர்.

நிர்மலாதேவியை தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய ரமேஷ் குமார், சங்கிலி, தமிழ் செல்வம், முத்துமணி, அலெக்ஸ் பாண்டியன் ஆகிய 5 பேரும் வரும் 28ம் தேதி நீதிமன்றம் காவலில் முசிறி கிளை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 பேரையும் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.