Police Department News

உள்ளாட்சி தேர்தலுக்கு பாதுகாப்பு பணியில் 842 போலீசார்

உள்ளாட்சி தேர்தலுக்கு பாதுகாப்பு பணியில் 842 போலீசார்

தமிழகத்தில் அக்டோபர் 9 ம் தேதி இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலும் மற்றும் 12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. இதில் மதுரை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் 64 இடங்களில் உள்ள 104 வாக்குச்சாவடிகளிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை 5 மையங்களிலும் நடைபெற இருக்கிறது.

தேர்தல் நடைபெற உள்ள 104 வாக்குச் சாவடிகளில் 23 வாக்குச் சாவடிகள் பதட்டமான வாக்குச் சாவடிகள் எனக் கண்டறியப்பட்டு அங்கு சார்பு ஆய்வாளர்கள் தலைமையில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே போல் ஒவ்வொரு 3 வாக்குச் சாவடிகளுக்கும் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையிலும் ரோந்து செய்யவும், அதே போல் 5 வாக்கு மையங்களுக்கு ஒரு காவல் துணைக்கண்காணிப்பாளர் தலைமையிலும், மேலும் 20 வாக்கு மையங்களுக்கு ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 9 மொபைல்கள் நியமிக்கப்பட்டு தகுந்த பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு எடுத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சிக்கான சாதாரண இடைத் தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 11 துணை காவல் கண்காணிப்பாளர், 30 காவல் ஆய்வாளர்கள், 92 சார்பு ஆய்வாளர்கள் 650 காவல் ஆளினர்கள் உட்பட 842 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.