சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வுக் காக சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தவர்கள்.
சென்னை எலியட்ஸ் கடற்கரையில் சென்னை பெருநகர காவல்துறையின் சார்பாகவும் சென்னை பெரு மாநகராட்சியின் சார்பிலும் கொரோனா நோய்த் தொற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது எலியட்ஸ் கடற்கரையில் முகத்தின் அவசியத்தையும் கொரோனா நோய்த்தொற்றின் பயங்கரத்தையும் அவர்கள் பொது மக்களுக்கு விளக்கினர். முக கவசம் அணியாத பொதுமக்களுக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டது. கடற்கரையில் வந்திருந்த பொதுமக்கள் அனைவரையும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து
இந்த நிகழ்ச்சியின்போது பலகுரல் நிகழ்ச்சி மற்றும் சிலம்பாட்டம் மாணவியரின் கொரோனா நோய் தோற்று குறித்த குறு நாடகம் மற்றும் போதையின் பயங்கரத்தையும் விளக்கும் சைகை நாடகமும் நடைபெற்றது.
அப்போது பேசிய சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் தற்போது சென்னை மாநகரத்தில் தினமும் 200 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்த நிலை மாற வேண்டும் மேலும் நோய் தொற்றுடைய முழுவதுமாக கோரோனோ நோயிலிருந்து விடுபட பொதுமக்கள் பாதுகாப்புடனும் காவல்துறை மற்றும் சென்னைப் பெரு மாநகராட்சி அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அனைவருக்கும் வணக்கம்
இன்று 23.10.2021 மாலை பெசன்ட் நகர் கடற்கரையில் சென்னை RCC Bluewaves மற்றும் காவல்துறை துறையின் சார்பில் கொரனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள்
கலந்து கொணடு மக்களுக்கு கொரனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசின் சார்பாக சிறப்பாக நடைபெற்றது.
இதில் RCC-BLUEWAVES தலைவர் திரு கோபி மற்றும் RC Chennai green city president திரு.ஷியாம் சேகர் அவர்கள் சிறப்பாக நிகழ்ச்சி நடைபெற உறுதுணையாக இருந்தது முடித்தார்கள் என்பதைத் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.