மாவட்ட நீதிபதி சண்முக சுந்தரம் தலைமையில் தேசிய சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இராமநாதபுரத்தில் 13/11/2021ல் சட்ட விழிப்புணர்வு முகாம் தேசிய சட்டப்பணிகள் ஆணை குழுவின் சார்பில் காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றதுஇந்த முகாமில் மாவட்ட நீதிபதி சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், முதன்மை குற்றவியல் நடுவர் கவிதா, சார்பு நீதிபதி கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், வழக்கறிஞர் சங்க தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, அரசு வழக்கறிஞர் முனியசாமி மற்றும் நீதிமன்ற பணியாளர்கள், பல்வேறு அரசு துறை அதிகாரிகள், பொது மக்கள், பயனாளிகள் பங்கேற்றனர்.
சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சைல்டு லைன், சுகாதார துறையினர் இதுபோன்று பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் ஸ்டால் அமைத்து உற்பத்தி பொருட்களை கண்காட்சிக்காகவும் வைத்தனர். பயனாளிகளுக்கு தையல்இயந்திரம், சலவை பெட்டி, நழிந்தோர்க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கினர். மனுவை பெற்று கொண்ட மாவட்ட நீதி அரசர் உங்கள் மனு மீது அந்தந்த துறை வாரியாக விரைவு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
சட்ட விழிப்புணர்வு முகாமில் தேசிய சட்டப்பணிகள் ஆணை குழுவினர்கள் சட்டங்களை
குறித்து பேசியது அனைவருக்கு பயனுள்ளதாக இருந்தது என்று பொதுமக்கள் கூறினர்.
