மதுரை தத்தனெரி பகுதியில் 22 கிலோ கஞ்சா கடத்திய நபர் கைது, செல்லூர் காவல் உதவி ஆணையரின் அதிரடி நடவடிக்கை
மதுரை மாநகரில் அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் மேலும் அவரின் உத்தரவின் பேரில் செல்லூர் காவல் உதவி ஆணையர் விஜய்குமார் அவர்கள், மற்றும் செல்லூர் D2, காவல்நிலைய ஆய்வாளர் திரு.மாடசாமி அவர்கள் ஆகியோர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது இந்நிலையில் தனிப்படையினர் வைகை வடகரை தத்தனெரி காமாக்ஷி நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக கையில் பையுடன் வந்த வாலிபரிடம் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர், அப்போது அந்த வாலிபரிடம் 22 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.அதில் அவர் தத்தனெரி அருள்தாஸ்புரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கனேசன் வயது 46 என்பதும் அவர் மீது கரிமேடு காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது மேலும் கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது.
விசாரணையின் போது கனேசனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரை கைது செய்து அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.