Police Department News

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருக்கான “கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி” வகுப்பை மெட்ராஸ் ஐ.ஐ.டி வளாகத்தில் துவக்கி வைத்து உரையாற்றினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருக்கான “கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி” வகுப்பை மெட்ராஸ் ஐ.ஐ.டி வளாகத்தில் துவக்கி வைத்து உரையாற்றினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள், சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கணினி வழி குற்றங்களில் சிறந்த முறையில் புலனாய்வு மேற்கொள்ளவும், ஆன்லைன் மூலம் பெறப்படும் சைபர் கிரைம் தொடர்பான பொதுமக்களின் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், சமூக வலைதள குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், “கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி” (Computer Literacy Training Programme) வகுப்புகள் நடத்த உத்தரவிட்டதின் பேரில், சென்னை பெருநகரில் பணிபுரியும் 1,609 ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு சென்னையில் உள்ள 6 கல்லூரி மையங்களில் கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று (01.12.2021) காலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள், கோட்டூர்புரம், மெட்ராஸ் ஐ.ஐ.டி வளாகத்தில் சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி (Computer Literacy Training Programme) வகுப்பை துவக்கி வைத்து சிறப்பு உரையாற்றினார். இப்பயிற்சி வகுப்பில் அடிப்படை கணினி பயிற்சி, கணிணி வழி குற்றங்களில் புலானய்வு மேற்கொள்வது, தடயங்களை சேகரிப்பது, சேகரித்த தடயங்களை பாதுகாப்பது, சமூக வலைதள குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பது, CCTNS வலை தளத்தை கையாள்வது, பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் தயாரிப்பது குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பு இன்று (01.12.2021) முதல் ஒரு பேட்ஜிற்கு 2 நாட்கள் வீதம் ஒரு மாதத்திற்கு 6 கல்லூரி மையங்களில் நடத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநர் திரு.பாஸ்கர்ராமமூர்த்தி, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் திரு.J.லோகநாதன், இ.கா.ப, இணை ஆணையாளர் (கிழக்கு) திரு.S.பிரபாகரன், இ.கா.ப, துணை ஆணையாளர்கள் திரு.L.பாலாஜிசரவணன், (தலைமையிடம்) திருமதி.திஷாமிட்டல், இ.கா.ப, (மைலாப்பூர்) உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.