விருதுநகர் மாவட்டம்:-
-அருப்புக்கோட்டையில் கலாம் மாணவர்கள் இயக்கம் சார்பில்
வாகனங்களில் முகப்பு விளக்குகளில் ஒளியை கட்டுப்படுத்த கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியானது அருப்புக்கோட்டை புறநகர் பேருந்து பகுதியான காந்தி நகரில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அருப்புக்கோட்டை மோட்டார் வாகன போக்குவரத்து ஆய்வாளர் திரு. கண்ணன் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேருந்துகள், லாரிகள்,கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல்துறை சார்பு ஆய்வாளர்களான திரு.செல்லத்துரை, திரு.ஆனந்த் மற்றும் கலாம் மாணவர்கள் இயக்க விருதுநகர் மாவட்ட தலைவர் விஜய் நல்லதம்பி உள்ளிட்ட தன்னார்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.