ஆன் லைன் காதலனை நம்பி மதுரை வந்த சென்னையை சேர்ந்த சிறுமி காவல் துறையினரால் பெற்றோரிடம் ஒப்படைப்பு
மதுரை மாநகர் மாட்டுத்தாவணி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான M.G.R. பேரூந்து நிலையத்தில் நள்ளிரவில் தனியாக நின்றிருந்த 15 வயது சிறுமியை இரவு அலுவலில் இருந்த காவலர்கள் அழைத்து விசாரணை செய்ததில் மேற்படி சிறுமி தனது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் sharechat என்ற செயலி மூலம் கடந்த ஒரு வருடமாக பழகி வந்த நபரை தேடி மதுரை வந்ததாக கூறியுள்ளார் பின்னர் மேற்படி சிறுமி கூறிய தகவல்களின் அடிப்படையில் விசாரணை செய்ததில் மேற்படி சிறுமி சென்னையை சேர்ந்தவர் என்பதும் அவரை காணவில்லை என அவரது பெற்றோர் சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதும் தெரிய வந்தது.பின்னர் மேற்படி சிறுமிக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டு பாதுகாப்புடன் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்
தற்போது அறிவியல் வளர்ச்சியின் காரணமாக கைபேசி மற்றும் கணினி போன்ற சாதனங்களால் அனைவரும் அனைத்து விசயங்களையும் எளிதில் தெரிந்து கொள்ளக்கூடிய சூழல் நிலவுகிறது. மேலும் அத்தகைய சாதனங்களில் பயன்படுத்தும் செயலிகளான whatsapp,facebook, மற்றும் பல செயலிகள் மூலம் முகம் தெரியாத நபர்களுடனும் அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கைபேசி மற்றும் கணினி ஆகியவற்றை பயன்படுத்த கொடுக்கும் போது அவ்வப்போது அவர்களை கண்காணிக்க வேண்டும் அவ்வாறு கண்காணிக்கும் போது அவர்கள் தேவையில்லாத நபர்களிடம் தொடர்பு கொள்ளுவது மற்றும் வளைதளங்களை பயன்படுத்துவது தெரிய வந்தால் அவர்களிடம் கோபப்படாமல் அவர்கள் அதை பயன்படுத்துவதில் உள்ள பின் விளைவுகள் பற்றி எடுத்து கூற வேண்டும் அவர்கள் பயன்படுத்தும் செயலிகள் மூலம் யாரேயினும் அவர்களுக்கு பாலியல் தொல்லை செய்கிறார்களா என விசாரிக்க வேண்டும்
இவை தவிர பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு யாரேனும் மேற்படி செயலிகள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வது தெரியவந்தால் தங்கள் சரக காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கலாம் காவல் செயலியான SOS சிறப்பு கட்டுப்பாட்டு அறை எண் 1098, 1091, 181, மற்றும் மதுரை மாநகர் காவல் கட்டுப்பாட்டு அறை எண். 0452-2530070, 0452-2530100, Whatsapp எண். 8300021100, ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.என்று மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு செந்தில்குமார், IPS அவர்கள் தெரிவித்துள்ளார்கள்