பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாதுகாப்பான பேரூந்து பயணம் பற்றிய விழிப்புணர்வு காவல்துறை போக்குவரத்து துறை போக்குவரத்து கழகம் ஆகியோர் இணைந்து வழங்கினர்
சமீப காலமாக பள்ளி மாணவர்கள் பேரூந்தில் பயணம் செய்யும் போது படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணம் செய்வது தொடர்கதையாக நீடித்து வருகிறது இந்த ஆபத்தான பேரூந்து பயணத்தை தடுக்கு பொருட்டு காவல்துறையினர் தொடர் விழிப்புணர்வு மாணவர்களுக்கிடையே நடத்தி வருகின்றனர் இருந்த போதிலும் நேற்று பழைய விளாங்குடியை சேர்ந்த மாணவர் ஒருவர் பேரூந்து படிக்கட்டு பயணத்தால் உயிரிழத்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பேரூந்தில் பள்ளி மாணவர்களின் படிக்கட்டு பயணங்களை தடுத்து மாணவர்களின் இன்னுயிரை காக்க இன்று 30.08.22 மதுரையின் 5 முக்கிய பகுதிகளில் காவல் துறை.. போக்குவரத்து துறை,, போக்குவரத்து கழகம்.. ஆகிய மூன்று துறைகளும் இணைந்து மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி… விழிப்புணர்வு வழங்கி துண்டு பிரசுரம் கொடுத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.. காவல்துறை சார்பாக தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.அ.தங்கமணி அவர்கள் போக்குவரத்து துறை சார்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் திரு. சக்திவேல் அவர்கள் போக்குவரத்து கழகம் நிர்வாக மேலாளர் திரு.ராஜவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்