Police Department News

மதுரை ரிங் ரோட்டில் இன்று போக்குவரத்து மாற்றம்

மதுரை ரிங் ரோட்டில் இன்று போக்குவரத்து மாற்றம்

விருதுநகர் மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மதுரை ரிங் ரோட்டில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) காலை மதுரையில் இருந்து விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்கிறார். இதையொட்டி மதுரை ரிங் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 8 மணி முதல் மதுரையில் இருந்து கோவில்பட்டி நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மதுரை ரிங் ரோடு கருப்பசாமி கோவிலில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி செல்லும் நான்கு வழிச்சாலையில் இடதுபுறமாக திரும்பி ஆவியூர், காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, எட்டயபுரம், கோவில்பட்டி மார்க்கமாக செல்ல வேண்டும்.

திண்டுக்கல்லில் இருந்து வரும் வாகனங்களை கப்பலூர் பாலத்தில் இடதுபுறமாக திரும்பி மதுரை ரிங் ரோட்டில் அருப்புக்கோட்டை நோக்கி செல்லும் நான்கு வழி சாலையில் வலதுபுறம் திரும்பி ஆவியூர், காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, எட்டயபுரம், கோவில்பட்டி மார்க்கமாக செல்ல வேண்டும்

காலை 8 மணி முதல் கோவில்பட்டியில் இருந்து மதுரை நோக்கி வரும் கனரக வாகனங்கள் கோவில்பட்டி இனாம்மணியாச்சி, திட்டன்குளம் வழியாக எட்டயபுரம், அருப்புக்கோட்டை, கல்குறிச்சி, காரியாபட்டி, ஆவியூர் வழியாக மதுரை மற்றும் திண்டுக்கல் செல்ல வேண்டும்.

மதியம் 1 மணி முதல் கோவில்பட்டியில் இருந்து மதுரை நோக்கி வரும் இலகுரக வாகனங்கள், சாத்தூர் வெங்கடாசலபுரம் காவல் சோதனை சாவடியிலிருந்து அணுகு சாலை வழியாக இடதுபுறமாக திரும்பி மேட்டமலை, மீனம்பட்டி, சிவகாசி, பிள்ளைகுழி சந்திப்பிலிருந்து வலதுபுறமாக திரும்பி திருத்தங்கல், மத்தியசேனை சந்திப்பு, ஆமத்தூர், நந்தா ஓட்டல் சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி மதுரை செல்ல வேண்டும்.

கோவில் புலிகுத்தி விலக்கில் இருந்து இடதுபுறமாக திரும்பி கன்னிச்சேரி, ஓ.கோவில்பட்டி, சங்கரலிங்கபுரம், முத்துலாபுரம், மத்தியசேனை சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி ஆமத்தூர், நந்தா ஓட்டல் சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி மதுரை நோக்கி செல்ல வேண்டும்.

மதியம் 1 மணி முதல் மதுரைலிருந்து சாத்தூர் நோக்கி செல்லும் இலகுரக வாகனங்கள், சிவகாசி சர்வீஸ் ரோடு வழியாக இடதுபுறமாக திரும்பி, எம்.ஜி.ஆர் சிலை சந்திப்பு, அல்லம்பட்டி சந்திப்பு, பாலவநத்தத்தில் வலதுபுறமாக திரும்பி, மெட்டுக்குண்டு, சென்னல்குடி, கோட்டூர், ராம்கோ சாலையில் வலதுபுறமாக திரும்பி ஆவுடையாபுரம் ரெயில்வே கேட் நான்கு வழிசாலையில் இடதுபுறமாக திரும்பி சாத்தூர் நோக்கி செல்ல வேண்டும்.

இவ்வாறு விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.