Police Department News

தன்னுடைய இறப்பு சான்றிதழை காணோம்னு விளம்பரம் கொடுத்த நபர்.. சொர்கத்திலா, நரகத்திலா எங்கு கொடுப்பது.. IPS ஆபிசர் தந்த பதில்.

தற்போது இணையத்தில் வைரலாக பரவிவரும் ஒரு விளம்பரத்தில் தனது இறப்புச் சான்றிதழை தொலைத்து விட்டதாகவும் அதைப் பற்றிய தகவலையும் பகிர்ந்திருக்கிறார் ஒருவர். அந்த விளம்பரத்தில் “லும்டிங் பஜாரில் (அஸ்ஸாம்) காலை நேரம் காலை சுமார் 10 மணியளவில் 07/09/22 தேதியிட்ட எனது இறப்புச் சான்றிதழை நான் இழந்துவிட்டேன்” என்று ரஞ்சித் குமார் சக்ரவர்த்தி என்பவர் தனது விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காணாமல் போன ஆவணத்தின் பதிவு மற்றும் வரிசை எண்ணையும் அவர் அந்த விளம்பரத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த புகைப்படத்தை ஐபிஎஸ் அதிகாரியான ரூபின் ஷர்மா என்பவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ஷர்மா தனது பதிவில்,” இது இந்தியாவில் மட்டுமே நடக்கும்” என குறிப்பிட்டுள்ளதோடு சிரிக்கும் எமோஜிக்களையும் பயன்படுத்தியிருக்கிறார்.
கிடைத்தால் சொர்கத்திலா, நரகத்திலா எங்கு கொடுப்பது..IPS ஆபிசர் தந்த பதில்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருவதுடன், நெட்டிசன்கள் இதுகுறித்து பல்வேறு விதமாக கமெண்ட் செய்துவருகின்றனர். இந்த பதிவில் ஒருவர்,”தொலைந்துபோன சான்றிதழ் கிடைத்துவிட்டால் சொர்க்கம் அல்லது நகரம் இந்த இரண்டில் எங்கே சமர்ப்பிக்கவேண்டும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.