குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் மூலம் 17.44 லட்சம் வசூல்
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மதுவிலக்கு குற்றவழக்குகளுடன் தொடர்புடைய 102 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது அதில் 162 பேர் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். அவர்களிடம் 96 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் ஒப்படைக்கப்பட்டன. இதற்காக ஏலம் கேட்டவர்களிடம் இருந்து 17 லட்சத்து 44 ஆயிரத்து 522 வசூலிக்கப்பட்டது இந்த தொகை அரசு கணக்கில் செலுத்தப்படும் என்று மதுரை மாவட்ட காவல் காண்காணிப்பாளர் திரு. சிவபிரசாத் அவர்கள் தெரிவித்தார்.