Police Department News

குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பேன்-புதிதாக பொறுப்பேற்ற மதுரை சிட்டி போலீஸ் கமிஷனர் உறுதி

குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பேன்-புதிதாக பொறுப்பேற்ற மதுரை சிட்டி போலீஸ் கமிஷனர் உறுதி

மதுரை மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பேன்.
புதிதாக பொறுப்பேற்ற மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் உறுதியளித்துள்ளார்.

மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து புதிய போலீஸ் கமிஷனராக நரேந்திரன் நாயர் நியமிக்கப் பட்டுள்ளார். அவர் இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவல கத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து நரேந்திரன் நாயர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மாநகரில் மக்கள் பணியில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவேன், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல், மற்றும் சித்திரை திரு விழாவை கொண்டாட மாநகர காவல்துறை பாதுகாப்பு அளிக்கும், மாநகரில் ரவுடிசம், கஞ்சா குற்றச்சம்பவங்களை முழுமையாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஏற்கனவே மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தால் செயல்படுத்தபடும் அனைத்து திட்டங்களும் மேம்படுத்தப்பட்டு செயல் படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரன் நாயர், 2005-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர் ஈரோடு, கமுதி, வந்தவாசி, சிதம்பரம் ஆகிய இடங்களில் ஏ.எஸ்.பி.யாக பணியாற்றி, 2009-ம் ஆண்டு எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.

எஸ்.பி.சி.ஐ.டி., எஸ்.பி.யாக தூத்துக்குடியிலும், எஸ்.பி.யாக திருநெல்வேலி, விழுப்புரம் மாவட்டங்க ளிலும் , கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர் துணை ஆணையராகவும், ஆளு நரின் பாதுகாப்புப்பிரிவு கூடுதல் துணை ஆணையராகவும் , கேரளா மாநிலத்தில் ஐ.பி.பிரிவு எஸ்.பி.யாகவும் நரேந்திரன் நாயர் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்ற நரேந்திரன் நாயர் சென்னை தலைமையிட டி.ஐ.ஜி. பணியாற்றிய பின்னர், கோவை சரக டி.ஐ.ஜி.யாகவும் பணி புரிந்தார். அதன் பின்பு சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்து வந்தார்.

Leave a Reply

Your email address will not be published.