பீளமேடு அருகே வீடு புகுந்து நகை, பணம் பறித்த வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர்.
கோவை மாநகர் பீளமேடு விமான நிலையம் அருகே பிருந்தா வன் நகரைச் சேர்ந்த தம்பதி தினேஷ்குமார் (27), சவுமியா (25. இருவரும் மென்பொருள் பொறி யாளர்களாக பணிபுரிந்து வருகின் றனர். மேற்கண்ட முகவரியில் தினேஷ்குமார், சவுமியா, மாமியார் ராணி (50) ஆகியோர் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், ராணியின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகை, சவுமியாவின் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் நகை, ரூ.6 ஆயிரம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து தினேஷ்குமார் அளித்த புகாரின்பேரில், பீளமேடு குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதியை நேற்று பிடித்தனர்.
பீளமேடு போலீஸார் கூறும் போது, ‘நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக, மத்திய பிரதேச மாநிலம் கேட்னி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி பூன்லால் (20), சவுபிக்னா (20) ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள், கடந்த சில நாட்களாக மேற்கண்ட பகுதியில் டெண்ட் அடித்து தங்கியுள்ளனர். ஊசி, பாசி விற்பனைக்காக மத்தியப் பிரதேசத்தில் இருந்து கோவைக்கு வந்துள்ளனர்.
ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தில் தினேஷ்குமார் வீடு உள்ளதால், அவரது வீட்டின் பின் பக்க கதவை உடைத்து பூன்லால் உள்ளே புகுந்து நகை, பணத்தை பறித்துள்ளார். யாரே னும் வருகிறார்களா என்று வேவு பார்க்க, சவுபிக்னா வெளியே நின்றுள்ளார். இவர்களோடு தங்கியிருந்த கூட்டாளிகள் தப்பிச் சென்றுவிட்டனர். இவர்களிடம் இருந்து ஒரு பவுன் நகை, ரூ.6 ஆயிரம் பணம் மீட்கப்பட்டுள்ளது. இருவரும் இந்தி பேசுகின்றனர்.
இவர்களது பேச்சு தெளிவில்லா மல் இருப்பதால், விசாரணை நடத் துவதில் சற்று சிரமம் ஏற்பட்டது. மொழிப் பெயர்ப்பாளர் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட னர்’’ என்றனர்.