Police Department News

சென்னை ஈ.வே.ரா. சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் ஈ.வே.ரா சாலையில் சுதா ஓட்டல் முன்பு (நாயர் மேம்பாலம் சந்திப்பிற்கும் தாசபிரகாஷ் பாயின்ட் சந்திப்பிற்கும் இடையில்) நெடுஞ்சாலை துறையினர் சாலையை ஆக்கிரமித்து, இன்று (சனிக்கிழமை) இரவு 10 மணி முதல் 3-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் கட்டுமான அலுவல் மேற்கொள்ள உள்ளதால், போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து ஈ.வே.ரா சாலை வழியாக வரும் வாகனங்கள் தாசபிரகாஷ் சந்திப்பில் இருந்து நாயர் மேம்பாலம் சந்திப்பை நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் ஈ.வே.ரா சாலையில் தாசபிரகாஷ் பாயின்ட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, ராஜா அண்ணாமலை சாலை வழியாக சென்று அழகப்பா சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அழகப்பா சாலை மறுபடியும் வலதுபுறம் திரும்பி நாயர் மேம்பாலம் சந்திப்பு மற்றும் ஈ.வே.ரா சாலை வழியாக செல்லலாம். ஈ.வே.ரா சாலையில் நாயர் மேம்பாலம் சந்திப்பிலிருந்து தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி வரும் வாகனங்கள் எந்தவித மாற்றமின்றி நேராக செல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published.