திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் தெரிவித்த தாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் நேருயுவ கேந்திரா மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களில் சிறப்பாக செயல்படும் உறுப்பினர்களை தேர்வு செய்து, குழந்தைகள் பாதுகாப்பு தன்னார்வ லர்களாக செயல்படுத்திடும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளித்திட வேண்டும்.
சிறுதொழில் பிச்சையெடுப்பில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இளைஞர் நீதிச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்று செயல்பட்டு வரும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம் நடத்திட வேண்டும்.
கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தலைமையாசிரியர்கள், காவல்துறையை சார்ந்த சிறப்பு சிறார் காவல்பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கு, குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு, குழந்தைகள் நலன் தொடர்புடைய சட்டங்கள் குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி வழங்க வேண்டும். கிராம, வட்டார, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அளவி லான குழந்தைகள் பாது காப்பு குழு கூட்டங்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது தேவைப்படும் போது நடத்திட வேண்டும் என தெரிவித்தார்.