கொடைக்கானலில் மின்கசிவு காரணமாக தீ விபத்தில் 5 கடைகள் சேதம்
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் தனியார் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு ள்ளது. இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் 5-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீரென தீ பற்றியது. இந்த தீ மளமளவென அடுத்த டுத்த கடைகளுக்கும் பரவியது.
இதன் காரணமாக காதர் என்பவரின் கம்பளி விற்பனை கடை, வேலார் என்பவரின் காய்கறிக்கடை, மணி என்பவரின் லாரி புக்கிங் ஆபீஸ்,ஜோஸ்வா என்பவரின் தேனீர்கடை, குட்டி என்கிற சலேத்நாத னின் டிராவல்ஸ் அலுவலகம் ஆகிய கடைகள் தீக்கிரையானது.இந்தக் கடைகளில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் விரைந்து தீயை அணைத்தனர்.விரைவாக செயல்பட்ட தீயணைப்புத் துறையினர் தேநீர் கடையில் இருந்த கேஸ் சிலிண்டரை பாதுகாப்பாக அப்புறப்படு த்தினர்.இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. லேசான சாரல் துளிகள் விழுந்தாலே கொடைக்கானலில் மின்சாரம் துண்டிக்கப்படு வது வாடிக்கையாக உள்ளது. அச்சமயத்தில் அடிக்கடி மின்சாரம் போய் வரும்போது திடீரென கூடுதல் மின்சாரம் பாய்வதும், அதன் காரணமாக வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள், பல்புகள் என வீட்டு உபயோகப் பொருட்கள் செயலற்றுப் போகிறது. இதே போல் நேற்று முதல் அடிக்கடி மின்சாரம் நின்று வந்ததாலும், கூடுதல் மின்சாரம் பாய்ந்ததாலும் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்து வருகிறது.
எனவே சீரான மின்விநியோகம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று காலை நடந்த தீ விபத்தில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.
எனவே வருவாய்த்துறை யினர் உரிய ஆய்வு செய்து இழப்பீடு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.