Police Department News

ஷாக்அடிக்குது தமிழ்நாட்டில் இலவச மின்சாரம் குறித்த அறிவிப்பு.

ஷாக்அடிக்குது தமிழ்நாட்டில் இலவச மின்சாரம் குறித்த அறிவிப்பு.

தமிழகத்தில் இலவசமாக விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு வழங்கி வரும் மின்சாரம் குறித்து, மத்திய அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் நடைமுறையில் உள்ளன… இதில், விவசாயத்துக்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது..

வீடுகளை பொறுத்தவரை 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்படும்.. உயர் அழுத்த மின்சாரம் மாதம்தோறும் கணக்கீடு செய்யப்படும். இப்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கீடு செய்ய “ஸ்டேடிக்” என்ற மீட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மின்வாரிய ஊழியர்கள், அதை கணக்கீடு செய்து நுகர்வோர்களுக்கு தெரிவிப்பதையடுத்து, நுகர்வோர்களும், அந்த கட்டணங்களை செலுத்திவருகின்றனர். அதேபோல, தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை சலுகை விலையிலும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.. இதைதவிர, குடிசை வீடு விவசாயத்திற்கு முழுமையாக இலவசமாகவும், கைத்தறிக்கு 300 யூனிட் வரையும், விசைத்தறிக்கு 1000 யூனிட் வரையும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
இதற்காக மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை தமிழக அரசு மானியமாக வழங்குகிறது… இலவச மின்சாரம் என்பதால் விவசாயம், குடிசை வீடுகளுக்கு மீட்டர் பொருத்தப்படுவதில்லை… அதனால் இந்த பிரிவுகளுக்கான மானியத் தொகையை உத்தேசமாக மதிப்பிட்டு வாரியத்திற்கு மாநில அரசு வழங்குகிறது… அதாவது, ஒரு விவசாய இணைப்புக்கு ஆண்டுக்கு ஒரு குதிரை திறனுக்கு 3550 ரூபாய் அரசு மானியம் வழங்கப்படுகிறது.
எனினும், இதில் ஏற்படும் முறைகேட்டை தடுக்க, மீட்டர் பொருத்தாமல் எந்த பிரிவிலும் மின் இணைப்பு வழங்கக் கூடாது என்றும், ஏற்கனவே இணைப்பு வழங்கி இருந்தால் உடனடியாக மீட்டர் பொருத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பல முறை அறிவுறுத்தியே உள்ளது. ஆனால், மீட்டர் பொருத்தினால் இலவச மின்சாரம் ரத்தாகி விடுமே என்பதால், தமிழகத்தில் சில எதிர்ப்புகளும் கிளம்பின.. எனினும், இப்போதுவரை தமிழகத்தில் 2 லட்சம் விவசாய இணைப்புகளுக்கு மின் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது..
மீதமுள்ள இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்படவில்லை. ஆனால் இனி ஒவ்வொரு மாதமும் இலவச மின்சாரத்தை துல்லியமாக கணக்கிட்டு அதற்கான மானியத்தொகையை மட்டுமே வழங்க வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மீட்டர் பொருத்துவதற்கு இன்னும் 30 லட்சம் மீட்டர்கள் தமிழகத்திற்கு தேவை. மின்வாரியத்திடம் அதற்கான தொகை இல்லை. அதனால், வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் நடந்து வருவதால், அங்கிருக்கும் பழைய மீட்டர்களை விவசாய மாற்றம் குடிசை இணைப்புகளுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாம்..

Leave a Reply

Your email address will not be published.