Police Department News

பாலக்கோடு அருகே கோடைகாலத்தில் குடிநீர் கேட்ட கிராம மக்களுக்கு கிடைத்த அதிர்ச்சி- ஊராட்சி தலைவியின் கணவரின் பேச்சால் கலைந்து சென்ற பொதுமக்கள்

பாலக்கோடு அருகே கோடைகாலத்தில் குடிநீர் கேட்ட கிராம மக்களுக்கு கிடைத்த அதிர்ச்சி- ஊராட்சி தலைவியின் கணவரின் பேச்சால் கலைந்து சென்ற பொதுமக்கள்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் எர்ரணஹள்ளி ஊராட்சியில் உள்ள பி.கொல்லப்பட்டி கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் வளர்மதிசின்னவன் தலைமையில் நடைபெற்றது.இதில் கிராமமக்கள் பங்கேற்று ஊராட்சியின் வரவு செலவு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து கோடைகாலம் என்பதால் போதிய ஒகேனக்கல் குடிநீர் வருவதில்லை எனவும் ,தலைவரின் சொந்த கிராமத்திற்கும்,உறவினர்களுக்கு மட்டும் மத்திய ஜல்சக்தி திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளதாகும் மீதமுள்ள ரெட்டியூர், வீஸ்டேரிப்பள்ளம், கக்கஞ்சிபுரம், காவக்கரை உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் குழாய் அமைக்கவில்லை எனவும் இதனால் நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வருவதாகவும், தலைவர் ஒரு தலைப்பட்சமாகவும் செயல்படுவதாக பெண்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தலைவியின் கணவர் தலையிட்டு யாரிடம் வேண்டுமானாலும் புகார் தெரிவித்துக்கொள் என்று மிரட்டும் தோணியில் பேசியதால் பொதுமக்கள் செய்வதறியாது கூட்டத்திலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் கலைந்து சென்றனர்.இதில் பெண்கள் அடுத்து கட்டமாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிப்பதாக கூறிய பேச்சால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published.