
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
திருமங்கலம் சேடப்பட்டி அருகே உள்ள பெரியகட்டளை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தின் அருகே சென்றபோது ஒரு இருசக்கர வாகனம் வந்தது. அதில் ஒரு மூதாட்டியும், ஒரு வாலிபரும் இருந்தனர். அவர்களை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் சோதனை செய்தபோது 4கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் பெரிய கட்டளையை சேர்ந்த பூமா என்ற பூவம்மாள் (வயது61), வனராஜ்(32) என்பதும் தஞ்சை விளார் பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருசக்கர வாகனம் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து 3பேர் மீதும் சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பூவம்மாள், வனராஜை கைது செய்தனர்
