Police Department News

பணியிடைநீக்கம்; 2 ஆண்டுகள் வழக்கு!’ – இளம்பெண் தற்கொலை

பணியிடைநீக்கம்; 2 ஆண்டுகள் வழக்கு!' - இளம்பெண் தற்கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட தஞ்சை இன்ஸ்பெக்டர் இந்த வழக்கிலிருந்து விடுதலையாகி மீண்டும் காக்கி உடை உடுத்துவேன் என சேதுமணி மாதவன் தனது நண்பர்களிடம் கூறுவார். தஞ்சாவூரில் அகிலா என்ற இளம் பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் மீது குற்றம் சுமத்தப்பட்டதுடன் விசாரணையில் அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. தற்போது இந்தத் தண்டனை ரத்து செய்யப்பட டி.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று மீண்டும் பணிக்கு வர இருக்கிறார் என காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசிக் கொள்கின்றனர். கோவை வடவள்ளி சிஎஸ் நகரைச் சேர்ந்தவர் அகிலா என்கிற அகிலாண்டேஸ்வரி. இன்ஜினீயரான இவர் மீது கடந்த 2007-ம் ஆண்டு தஞ்சாவூர் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த சிலர்,அகிலா வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டார்’ என அப்போதைய எஸ்.பி-யிடம் புகார் அளித்தனர். இந்த வழக்கை மருத்துவக் கல்லூரி காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த சேதுமணி மாதவன் என்பவர் விசாரித்து வந்தார். அகிலா, தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கவைத்து விசாரிக்கப்பட்டுவந்த நிலையில், 2007 நவம்பர் 19-ம் தேதி ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கியபடி மர்மான முறையில் இறந்தார்.
என் மரணத்துக்கு இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் உள்ளிட்ட மூன்று பேர்தான் காரணம்’ என அகிலா கடிதம் எழுதி வைத்திருந்தார். விசாரணைக்கு வந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்போது தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிரடி நடவடிக்கையால் குற்றச்செயல்கள் குறைவதற்கு காரணமாக இருந்த சேதுமணி மாதவன்தான் இதற்கு காரணம் என்ற தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சேதுமணி மாதவன் உள்ளிட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கின் விசாரணை தஞ்சை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து, மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார் சேதுமணி மாதவன். இந்த நிலையில் அகிலா தொடர்பான வழக்கில் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தது தஞ்சை மகளிர் விரைவு நீதிமன்றம். இந்தத் தீர்ப்பு அகிலாவின் குடும்பத்துக்கு மகிழ்ச்சியைத் தந்தது.நீதி வென்று விட்டதாக’ அவர்கள் கூறினர்.
இதையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார் சேதுமணி மாதவன். அங்கு நடைபெற்ற விசாரணையில், சேதுமணி மாதவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லை. இதனால், தஞ்சை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாகவும், அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்படுவதாகவும் கடந்த வாரத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது குறித்து சேதுமணி மாதவனுக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், `அகிலா வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட பிறகு இன்ஸ்பெக்டர் பொறுப்பிலிருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார் சேதுமணி மாதவன். அதன் பிறகு சுமார் இரண்டு ஆண்டுகள் வழக்கு மற்றும் குடும்பத்தைக் கவனித்துவந்தார். மேலும்,எதற்கும் வளைந்து கொடுக்காமல், யாருக்கும் அடிபணியாமல், நேர்மையாக அதேநேரத்தில் அதிரடியாக பணி செய்ததற்காக இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டேன். இதனால் நான் பெரிதும் மதித்த போலீஸ் வேலை உட்பட பலவற்றை இழந்தேன். ஆனாலும், இந்த வழக்கிலிருந்து விடுதலையாகி மீண்டும் காக்கி உடை உடுத்துவேன்’ என சேதுமணி மாதவன் தனது நண்பர்களிடம் கூறுவார்.
அதேபோல் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று பணிக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.