Police Recruitment

மதுரை தெற்குவாசல் பாலத்தின் கீழ் வாலிபர் பிணம் கொலையா போலீசார் விசாரைணை

மதுரை தெற்குவாசல் பாலத்தின் கீழ் வாலிபர் பிணம் கொலையா போலீசார் விசாரைணை

மதுரை தெற்கு வாசல் பாலத்தின் கீழ் நேற்றிரவு வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

மதுரை தெற்கு வாசல் மேம்பாலத்தின் கீழ் செல்லும் மதுரை ராமேஸ்வரம் செல்லும் ரயில்பாதையில் நேற்றிரவு 7.15 மணியளவில் வாலிபர் பிரேதம் கிடப்பதாக தெற்கு வாசல் போலீசாருக்கு தகவல் வர சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் சென்று பார்க்கையில் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார்.
போலீசாருக்கு வாலிபர் இரயில் அடிப்பட்டு இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் கிடத்தப்பட்டாரா? என்ற சந்தேகம் வந்தது.
உடனே சம்பவ இடத்திற்கு உயர் காவல் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர்.
இறந்தவர் குறித்து விசாரணை நடத்தியதில் விளாத்திகுளம் அரியநாச்சியாபுரம் சரவணக்குமாரின் மகன் காந்தி ராஜா(28) என்றும் இவர் சொந்தமாக தெற்குவாசல் பாலத்தின் கீழ் டாட்டா ஏசி வாடகை வாகனத்தை ஓட்டி வந்ததாகவும். இவர் கடந்து 5 ஆண்டுகளாக அப்பகுதியில் தண்டாளத்திற்கு அருகேயே உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்ததாகவும் தெரிந்தது.

இந்நிலையில் போலீசார் இது கொலையாக இருக்கலாம் என்றும் போலீசாரை குழப்பவேண்டும் என்ற எண்ணத்தில் இரயில் தண்டவாளத்தில் உடலை போட்டு திசைதிருப்பலாம் என்பதால் காந்தி ராஜாவின் நண்பர்களை பிடித்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியதில் காந்தி ராஜா அதே பகுதியில் வசிக்கும் மாயழகு என்பவரின் மகளை காதலித்து வந்ததாகவும் இதையறிந்த பெண்ணின் பெற்றோர் காந்திராஜாவை கண்டித்துள்ளனர்.
நான் இவளை தான் உறுதியாக கல்யாணம் செய்வேன் என்று கூறியுள்ளார்.இதனால் கோபமடைந்த மாயழகு மற்றும் அவரின் இரு மகன்கள் இக்கொலையை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது.
இதில் ஒரு மகன் தற்போதுதான் பிளஸ்டூ முடித்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசார் தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.