தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே 8 வார்டு திமுக கவுன்சிலரின் மகள் கழுத்து இழுக்கப்பட்டு மர்ம முறையில் கொலை உடலை கைப்பற்றி மூன்று தனி படை அமைத்து போலீசார் விசாரணை.
தருமபுரி பழைய இரயில்வே லைன் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் மகள் ஹர்ஷா 23 இவரது தந்தை தர்மபுரி 8-வது வார்டு (திமுக) வார்டு கவுன்சிலராக உள்ளார்.
இவரது மகள் ஹர்ஷா (23) மருத்துவ மருந்து பிரிவில் பட்டபடிப்பு முடித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த ஆறு மாதமாக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை தர்மபுரியில் இருந்து ஓசூருக்கு சென்ற இந்த பெண் இன்று காலை தர்மபுரி அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடத்தூரான் கொட்டாய் அருகே நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில்
கழுத்து மற்றும் உடலில் படுகாயங்களுடன் சடலாமாக இறந்த நிலையில் கிடப்பதாக பொதுமக்கள் அதியாமான்கோட்டை போலிசாருக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணத்திற்கு வரன் பார்த்து வந்த நிலையில் ஓசூரில் இருந்து பெற்றோருக்கு தெரியாமல் எதற்காக தர்மபுரி வந்தார்? கடத்தி வரப்பட்டாரா?அல்லது முன்விரோதம் காரணமாக யாரேனும் இந்த பெண்ணை கடத்தி கொலை செய்தார்களா? என போலிசார் தனிப்படை கொண்டு தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.