Police Recruitment

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 722 வழக்குகளுக்கு சமரச தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 722 வழக்குகளுக்கு சமரச தீர்வு

தருமபுரி மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கு களுக்கு விரைவாகவும், சமரச முறையிலும் தீர்வு காண்பதற்காக தேசிய மக்கள் நீதிமன்றம் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்த மக்கள் நீதிமன்றம் தருமபுரி மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும் தாலுகா நீதிமன்றங்களிலும் நடைபெற்றது.

இதில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நிலம் தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகள் என அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 1,273 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 722 வழக்குகளுக்கு ரூ.8 கோடியே 29 லட்சம் தொகைக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

இதில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ராஜா, விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சையத் பர்க்கத்துல்லா, கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, குடும்ப நல நீதிபதி விஜயகுமாரி, தலைமை குற்றவியல் நீதிபதி சுரேஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுந்தர்ராஜன், குற்றவியல் நடுவர் பிரபு, கூடுதல் மகளிர் நீதிபதி மது வர்ஷினி மற்றும் மூத்த வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published.