Police Recruitment

தமிழ்நாடு தினம் கொண்டாட்டம்

தமிழ்நாடு தினம் கொண்டாட்டம்

இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்படு வதையொட்டி விருதுநகரில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தேசபந்து திடலில் அமைக்கப் பட்டிருந்த சிறப்பு அரசு சாதனை விளக்க கண்காட்சி யை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

1968-ம் ஆண்டு இதே தினத்தில் சட்டப் பேரவையில் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று அன்றைய முதல்-அமைச்சர் அண்ணா பெயர் சூட்டினார். கடந்த ஆண்டு முதல் இந்த தினம் (ஜூலை18) தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி விருதுநகரில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.

அதற்கு வித்திட்ட தியாகி சங்கரலிங்கனார் விருது நகரில் தான் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார் என்பது மேலும் ஒரு சிறப்பாகும். அவரது தியாகத்தை போற்றும் வகையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெருமைக்குரிய இந்த தினத்தை தமிழ்நாடு தினமாக கொண்டாடுமாறு உத்தரவிட்ட தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சிகளில் கலெக்டர் ஜெயசீலன், எம்.எல்.ஏ.சீனிவாசன், நகர சபை தலைவர் மாதவன், யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.