Police Recruitment

குடிநீர் திருடினால் இணைப்பு துண்டிக்கப்படும்

குடிநீர் திருடினால் இணைப்பு துண்டிக்கப்படும்

காரைக்குடி நகராட்சி 26-வது வார்டு பகுதியில் குடிநீர் சரியாக வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நகர்மன்ற தலைவர் முத்துத் துரை, ஆணையாளர் வீரமுத்துக் குமார் ஆகியோர் உத்தரவின்படி தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.

இதில் பல்வேறு இடங்களில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. அவர்களிடம் இருந்து

10-க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி தலைவர் முத்துத்துரை கூறியதாவது:-

காரைக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய 10 இடங்களில் மேல்நிலை தீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு நபருக்கு 112 லிட்டர் வீதம் 12.08 எம்எல்டி அதாவது கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் விதியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடுவதால் மற்ற வீடுகளுக்கு தண்ணீர் செல்வது தடைபடுகிறது. மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடப்படுவது கண்டறியப் பட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் தவறு செய்தால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.

மேலும் காரைக்குடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிதாக 2 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட உள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக் குமார், உதவி பொறியாளர் கள் பாலசுப்பிரமணியன், சீமா ஆகியோர் உடனி ருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.