சுக்கனஅள்ளியில் கோயில் நிலப் பிரச்சனையில் விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு,
ஒருவர் கைது .
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சுக்கனஅள்ளியை சேர்ந்த விவசாயி நந்தகுமார் (வயது.36),
இவர் அப்பகுதியில் உள்ள பட்டாளம்மன் கோவிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் மாணிய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்,
கடந்த மாதம் 27ம் தேதி கோவில் நிலம் ஏலம் விடுவதாக அறங்காவல் துறை வருவாய் ஆய்வாளர் துரை அறிவித்தார்,
பட்டாளம்மன் கோயில் வளாகத்தில் ஏலம் நடைப்பெற்ற போது நந்தகுமார் தற்போது நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ளதாகவும், திடிரென ஏலம் அறிவித்தால் விவசாயம் பாதிக்கும் என்றும் சற்று கால அவகாசம் கேட்டு ஏலத்திற்க்கு ஆட்சேபனை தெரிவித்தார்,
இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியை சேர்ந்த பரமஞானம்(வயது.56), ராஜன் (வயது .67) நாராயணன் (வயது.50) முருகேசன் (வயது.47) ஆகியோர் கூட்டாக சேர்ந்து நந்தகுமாரை தாக்கியதில் நந்தகுமார் பலத்த காயமடைந்தார்,
அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இன்று நந்தகுமார் மாரண்டஅள்ளி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பரமஞானத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.