Police Recruitment

பெங்களூரு:வழக்கறிஞர்கள் தொழிலில் பெண்கள் நிலைமை குறித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்

பெங்களூரு:வழக்கறிஞர்கள் தொழிலில் பெண்கள் நிலைமை குறித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தேசிய சட்ட பல்கலையின் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது:

வழக்கறிஞர்கள் தொழிலில் பெண்கள் அதிகம் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் அதிக அளவில் பெண்கள் இந்தத் துறையில் ஈடுபட வேண்டும்.

பெண்களுக்கு அதிக வாய்ப்பு தரும் அதே நேரத்தில், பணியிடங்களில் பெண்களுக்கு தேவையான வசதிகளும் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் தானியங்கி, ‘சானிடரி நாப்கின்’ இயந்திரம் பொருத்தப்பட்டு உள்ளது.

என் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்கள், மாதவிடாய் காலத்தில் உடல் பாதிப்பு ஏற்படுவது குறித்து என்னிடம் பேசினர். இதையடுத்து, அவர்களை வீட்டில் இருந்து பணியாற்றும்படி கூறினேன். பணியில் சமத்துவம் உள்ளதுபோல், பெண்கள் தங்களுடைய பிரச்னைகள் குறித்தும் வெளிப்படையாக பேச வேண்டும்.

இந்த நேரத்தில் என்னுடைய மறைந்த முன்னாள் மனைவியின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வழக்கறிஞரான அவர், ஒரு சட்ட அலுவலகத்தில் பணியில் சேருவதற்கான நேர்முகத் தேர்வுக்கு சென்றார். பணி நேரம் என்ன என்று அவர் கேட்டுள்ளார்.

நாளில், 24 மணி நேரமும், ஆண்டில், 365 நாட்களும் பணியில் இருக்க வேண்டும் என்று நேர்முகத் தேர்வு நடத்தியவர் கூறியுள்ளார். அப்போது குடும்ப வேலைகளை யார் செய்வது என்று என் மனைவி கேட்டுள்ளார். வீட்டு வேலைகள், சமையல் தெரிந்த கணவரை தேர்ந்தெடுக்கும்படி கூறியுள்ளனர்.

ஆனால், தற்போது நிலைமை அப்படிஇல்லை. பணி நேரத்தில் நல்ல மாற்றம் வந்து உள்ளது. பெண்களுக்கு உகந்ததாக பணி நேரம் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.