Police Recruitment

மாணவர்களுக்கு சப்ளை செய்ய வைத்திருந்த 17 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

மாணவர்களுக்கு சப்ளை செய்ய வைத்திருந்த 17 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

மாணவர்களுக்கு சப்ளை செய்ய வைத்திருந்த 17 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரையில் போலீஸ் நிலையம் அருகில் என்.எம்.ஆர். பாலம் கீழ்ப்பகுதியில் விற்பனை செய்யப்பட்டது.

மதுரை
மதுரை தெற்குவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து சென்றனர். போலீஸ் நிலையம் அருகில் உள்ள என்.எம்.ஆர். பாலம் கீழ்ப்பகுதியில் உள்ள பிள்ளையார்பாளையம் ரோட்டில் சென்றபோது அந்தப்பகுதியில் புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குள்ள ஒரு இடத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 கிலோ புகையிலை பாக்கெட்டு களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை விற்ற பணம் ரூ.17 ஆயிரமும் கைப்பற்றப் பட்டது.

இது தொடர்பாக தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்ததாக சிம்மக்கல்லை சேர்ந்த அசோக்குமார் ஜெயின் (வயது52) என்பவரை கைது செய்தனர்.
இவரிடம் நடத்திய விசாரணையில், மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. எங்கிருந்து புகை யிலை பாக்கெட்டுகள் கடத்தி வரப்பட்டது? இதற்கு மூளையாக செயல்பட்டவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெற்குவாசல் போலீஸ் நிலையத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் 17 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகரில் சமூக விரோதிகள் கஞ்சா, புகை யிலை பாக்கெட்டுகளை சர்வ சாதாரணமாக விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி பகுதிகளில் மாணவர்களை குறிவைத்து விற்பனை நடக்கிறது. இதை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.