ராஜபாளையம்விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- மதுரை ரோட்டில் தனியார் பள்ளி அருகே காவல்துறை சோதனை சாவடி உள்ளது. இங்கு ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸ்சார் தேவர் ஜெயந்தியை முன்னி ட்டு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த னர். ஆய்வாளர் கவுதம் விஜி தலைமையில் போலீ சார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த னர். அப்போது சென்னை பதிவு எண் கொண்ட சொகு சு கார் வேகமாக வந்தது அதை நிறுத்த சென்ற சார்பு ஆய்வாளர் கவுதம்விஜி மீது இடித்த விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதை அறிந்த மற்ற போலீசார் அந்த காரை விரட்டி சென்ற னர். பின்னர் அந்த காரை சாத்தூரில் பிடித்து. போலீசார் சோதனை செய்த பொழுது காரில் 600 கிலோ கொண்ட 51 பண்டல்களில் சுமார் ரூ.12 லட்சம் மதிப்பி லான குட்காவை கடத்தி சென்றது தெரியவந்தது.அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ராஜஸ் தானை சேர்ந்த முகமது அஸ்லாம் மற்றும் சதன்சிங் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் பயன் படுத்திய சொகுசு கார் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Related Articles
சிறப்பு அதிரடிபடையினரின் சிறப்பான பணி
சிறப்பு அதிரடிபடையினரின் சிறப்பான பணி தமிழக காவல் துறையின் சிறப்பு அதிரடிப் படையினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நலிவடைந்தோருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியும், மருத்துவ முகாம்களை நடத்தியும் வனப்பகுதிகளை தூய்மைப் படுத்தும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர். சிறப்பு அதிரடி படையினரின் சேவை பணியால் பல்வேறு இடங்களில் பொது மக்கள் பொது மக்கள் பயன் அடைந்துள்ளனர். மேலும் பொது மக்கள் அவர்களை பாராட்டி வருகின்றனர்.
சென்னையில் சைபர் குற்றங்களை குறைக்க புதிய சைபர் குற்றப்பிரிவு துணை ஆணையர் நியமிக்க பரிந்துரை
சென்னையில் சைபர் குற்றங்களை குறைக்க புதிய சைபர் குற்றப்பிரிவு துணை ஆணையர் நியமிக்க பரிந்துரை சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூடுதலாக 42, 000 CC TV அமைக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். சென்னை மாநகர் முழுவதும் 1.40 லட்சம் சிசிடிவிகள் பழுது நீக்கி புதுபிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சைபர் குற்றங்களை தடுக்க மேலும் 4 புதிய சைபர் குற்றத்தடுப்பு காவல்நிலையங்கள் ஏற்படுத்தும் திட்டம் உள்ளது […]
வாளுடன் பதுங்கியிருந்த வாலிபர்-சிறுவன் கைது
வாளுடன் பதுங்கியிருந்த வாலிபர்-சிறுவன் கைது மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சோலையழகு புரம் மூன்றாவது தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அங்கு வாள் ஒன்றுடன் பதுங்கி யிருந்த வாலிபரை பிடித்த னர். அவரிடம் விசாரித்த போது வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பூமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபி மகன் மணிகண்டன் என்ற கரிக்கடை மணி (வயது33) என்பது தெரியவந்தது. அவரும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதற்காக அந்த பகுதியில் வாளுடன் சுற்றி திரிந்திருக்கிறார். […]