அதிரடியாக உயர்ந்த அபராதம்.. இனிமே இதெல்லாம் செய்தால் பெருங்குற்றம்.. போக்குவரத்து விதி மாற்றம்
சென்னையில் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அபராதமும் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் சாலை போக்குவரத்து விதிகள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஆட்டோக்கள் 40 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் 30 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்தான் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய பல்லாயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி பல்வேறு விதிகளான வேகமாக ஓட்டுவது, லைசன்ஸ் இல்லாமல் ஓட்டுவது, டிராபிக் லைட்டுகளை பின்பற்றாமல் இருப்பது, கோடுகளை மதிக்காமல் நிற்பது, ரேஷ் டிரைவிங் செய்வது போன்ற காரணங்கள் காரணமாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி சென்னையில் விதிகளை மீறிய 12600 பேரின் லைசன்ஸ் முடக்கப்பட்டு உள்ளது. இதில் 50 சதவிகிதம் பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உளது என்று சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.