பட்டாசு வெடித்து வீட்டின் மேற்கூரை-தென்னை மரம் எரிந்து சாம்பல்.
மதுரை
தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட் டது. தமிழகத்தில் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையிலும் அதை கண்டுகொள்ளாமல் பொதுமக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் மதுரை பைபாஸ் நேரு நகர் பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ராக்கெட் பட்டாசு ஒன்று அருகிலிருந்த வீட்டின் மேற்கூரையில் பட்டதில் மளமளவென தீ பரவியது. இது குறித்து பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.
அதன்பேரில் நிலைய அதிகாரிகள் எஸ்.எஸ்.ஓ. பாலமுருகன், ஏ.டி.ஓ. சுரேஷ் கண்ணன் ஆகியோர் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் உயிர்சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
அதேபோன்று டி.வி.எஸ். நகர் பகுதியில் வெடித்த பட்டாசுகளால் அப்பகுதியில் இருந்த தென்னை மரத்தில் தீப்பிடித்தது. பெரி யார் நிலைய தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆதறவற்றோர், முதியோர்களுக்கு
தீபாவளியையொட்டி அன்பு உறவுகள் குழு சார்பில் திருநகரில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லம், பைக்காராவில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம் மற்றும் காளவாசல், பெரியார் உள்ளிட்ட பல்வேறு சாலையோ ரத்தில் வசிப்பவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு களை நவீன் கண்ணன், தீபன் சக்ரவர்த்தி, சரவணன் உள்ளிட்ட அன்பு உறவுகள் குழு உறுப்பினர்கள் வழங்கினர்