Police Department News

திருடனிடமே ஹெல்ப் கேட்ட டீச்சர்… அடித்தது `ஜாக்பாட்’; மொத்தமாக சுருட்டிய களவாணி

திருடனிடமே ஹெல்ப் கேட்ட டீச்சர்… அடித்தது `ஜாக்பாட்’; மொத்தமாக சுருட்டிய களவாணி

நெல்லை திசையன்விளை தனியார் வங்கி ஏடிஎம்மில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் பத்தாயிரம் ரூபாயை நூதனமாகப் பறித்த கொள்ளையனை சிசிடிவி உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி களியன்விளையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ரஞ்சித மணி, திசையன்விளை காமராஜர் சிலை சந்திப்பு அருகில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மிற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார்… தனக்கு பார்வை சரியாக தெரியாததால், அங்கிருந்த நபரிடம் பத்தாயிரம் ரூபாய் பணம் எடுத்துத் தருமாறு உதவி கேட்டுள்ளார்… கரும்பு தின்னக் கூலியா என்பதைப் போல் ரஞ்சிதம் உதவி கேட்டது ஒரு திருடனிடம் என்பது பிறகுதான் தெரிய வந்தது… ரஞ்சிதத்தின் ஏடிஎம்மைப் பெற்றுக் கொண்ட அந்த ஆசாமி, அவரிடம் இருந்து ரகசிய பின் நம்பரைத் தெரிந்து கொண்டு, போலி ஏடிஎம் கார்டை ரஞ்சிதத்தின் கையில் கொடுத்து கார்டு வேலை செய்யவில்லை என கூறியுள்ளார்… தனக்கு முதலில் பணம் எடுப்பதாகக் கூறிய அந்த ஆசாமி, ரஞ்சிதத்தின் ஏடிஎம் கார்டைக் கொண்டு 10 ஆயிரம் ரூபாயை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்… மீண்டும் சர்வர் வேலை செய்வதாக ஆசிரியரிடம் தெரிவித்து அவரிடமிருந்து டூப்ளிகேட் கார்டை பெற்றுக் கொண்டு ஒரிஜினல் ஏடிஎம் கார்டைக் கொண்டு ரஞ்சிதத்தையே பின் நம்பரை அழுத்த சொல்லி 5 ஆயிரம் ரூபாயை எடுத்து அவரின் கையில் கொடுத்து நம்ப வைத்துள்ளார்… ரஞ்சிதத்தின் செல்போன் எண்ணிற்கு ரூபாய் பத்தாயிரம் மற்றும் ஐந்தாயிரத்திற்கு மெசேஜ் வந்துள்ளது… இதுகுறித்து ரஞ்சிதம் அந்த மர்ம ஆசாமியிடம் கேட்டபோது, நெட்வொர்க் சரியான பிறகு பத்தாயிரம் பணம் கிரெடிட் ஆகிவிடும் என்று சொல்லி அங்கிருந்து தப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.